| ADDED : ஜூன் 01, 2024 05:45 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் 3 பேரிடம் 58 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமணன். இவரது கிரெடிட் கார்டு மூலம் 18 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதே போல், புதுச்சேரி கண் டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அஜய். இவருக்கு வந்த குறுந்தகவலில் வங்கியில் பல சலுகைகள் இருப்பதாக தகவல் இருந்தது. அந்த லிங்கை அவர் கிளிக் செய்து, வங்கி விபரங்களை பதிவு செய்தார். அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 14 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.மேலும், காரைக்காலை சேர்ந்த செல்வநாயகம் என்பவரின் மொபைலில் மர்ம நபர் ஒருவர், குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகவும், அதற்கு முன் பணம் அனுப்ப வேண்டும் என கூறினார். அதை நம்பி செல்வநாயகம் 26 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.