உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 6 பேர் கைது

ரகளை செய்த 6 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பொது இடத்தில் ரகளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.முத்தியால்பேட்டை காந்தி வீதியில், மது போதையில் ஒருவர் ரகளை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, முத்தியால்பேட்டை போலீசார் அங்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். முத்தியால்பேட்டையை சேர்ந்த விக்கி, 27, என, தெரியவந்தது. அதேபோல, சின்னயாபுரம் பகுதியில் ரகளை செய்த, சரவணன், 31, என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து, காலாப்பட்டு, ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை ஆகிய பகுதிகளில், பொது இடத்தில் ரகளை செய்த, ஜெயச்சந்திரன், 36; கிருஷ்ணகுமார், 22; ராமதாஸ், 36; கோகுல், 23; ஆகிய 4 பேரை அந்தந்த பகுதி போலீசார் பிடித்து வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ