உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேரிடம் ரூ.78 லட்சம் அபேஸ் 4 மாதத்தில் ரூ. 25 கோடி மோசடி

புதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேரிடம் ரூ.78 லட்சம் அபேஸ் 4 மாதத்தில் ரூ. 25 கோடி மோசடி

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முன்தினம் மட்டும் 9 நபர்களிடம் ரூ. 78 லட்சம் பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் அபேஸ் செய்துள்ளது.அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சதிஷ், 44; தனியார் நிறுவன மேலாளர். பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று மோசடி கும்பல் அனுப்பிய லிங்க் மூலம் இணைந்து, ரூ. 58 லட்சம் பணத்தை இழந்தார். மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு பணத்திற்கு மாதந்தோறும் 10 சதவீத வருமானம் லாபமாக வழங்குவதாக கூறியுள்ளனர்.இதனை நம்பி ஆல்பர்ட் ரூ. 19 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். இதுபோல் 9 பேர்களிடம் ஒரே நாளில் ரூ. 78 லட்சம் பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் திருடி உள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சீனியர் எஸ்.பி. கலைவாணன் கூறுகையில்: சமீப காலமாக இந்தியாவில் பங்கு சந்தை மோசடி அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப்பில் திடீரென ஒரு குழுவில் சேர்ப்பர். அதில் பங்கு சந்தை நிகழ்வுகள் பதிவிடப்படும். பங்கு சந்தை குறித்து விளக்கம் கொடுத்து நம்மை நம்ப வைப்பர்.பங்கு சந்தை ஏறும் என்பதால் பணம் முதலீடு செய்யுங்கள் என தெரிவிப்பார்கள். பங்குகளை வாங்க நினைத்தாலும் வாங்க முடியாது. தனி கணக்கு துவங்க வேண்டும் என கூறி, தங்களுடன் இணைந்து டிரேடிங் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி பணம் முதலீடு செய்து ரூ. 10 லட்சத்தை கடந்து விட்டால், உடனே அந்த பணத்தை எடுக்க முடியாதபடி செய்துவிடுவார்கள். யாரேனும் தான் சொல்லும் பங்கு வர்த்தகம், செயலியில் லாபம் கிடைக்கும் என கூறினால் அதை நம்பவேண்டாம்.கடந்த 4 மாதத்தில் 35க்கும் மேற்பட்ட நபர்கள் இதுபோன்ற போலி ேஷர் மார்க்கெட்டில் முதலீடு செய்து ரூ. 25 கோடி வரை பணத்தை இழந்துள்ளனர் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை