உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலில் ரூ.85 ஆயிரம் பறிமுதல்

காரைக்காலில் ரூ.85 ஆயிரம் பறிமுதல்

காரைக்கால் : காரைக்காலில் வாகனசோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.85 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி ,கழுகுமேடு பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.85ஆயிரத்து 940 இருப்பது போலீசார் கண்டுப்பிடித்தனர். விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, தில்லையாடியை சேர்ந்த மணிமாறன்,30; என்பதும் ,பணம் எடுத்துச் செல்வதற்கான ஆவணங்கள் இல்லை எனத் தெரியவந்தது. பின் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல்துறை அதிகாரியிடம் ஒப்படைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ