| ADDED : ஜூலை 08, 2024 04:19 AM
புதுச்சேரி: விளம்பர ஏஜென்சியிடம் ரூ. 9 லட்சம் மோசடி செய்த ஆன்லைன் கும்பல் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி அரபிந்தோ வீதியை சேர்ந்தவர் நாராயணன், 51, இவருடைய மொபைல் எண்ணுக்கு, மும்பை தனியார் நிறுவனத்தில் இருந்து அழைப்பதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக தெரிவித்து, அதற்கான வாட்ஸ் ஆப் லிங்கை நாராயணன் மொபைல் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.இதனை நம்பிய நாராயணன், முதற்கட்டமாக 3 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய், வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இரண்டவாது தவணையாக 5 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் அனுப்பினார்.பின் நாராயணன் வங்கி கணக்கிற்கு ரூ. 18 லட்சம் இருப்பதாக காண்பித்தது. இப்பணத்தை எடுப்பதற்கு சென்றபோது அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாதது கண்டுஅதிர்ச்சியடைந்தார்.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாராயணன் சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.