உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கு; விசாரணை துவக்கம்

சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கு; விசாரணை துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை துவங்கியது.புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ம் தேதி மாயமானார். 3 நாட்கள் கழித்து, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாய்க்காலில் மீட்கப்பட்டது.இச்சம்பவம் புதுச்சேரி முழுதும் கடும் அதிர்வலை களை ஏற்படுத்தியது.சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சோலை நகர் கருணாஸ், 19; விவேகானந்தன், 57; கைது செய்யப்பட்டனர். சீனியர் எஸ்.பி. கலைவாணன் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து 76 சாட்சிகள் பதிவு செய்து, 572 பக்க குற்றப் பத்திரிக்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 5ம் தேதி, சிறையில் உள்ள கருணாஸ், விவேகானந்தன் இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வந்தது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கருணாஸ், விவேகானந்தன் ஆஜராகினர். நீதிபதி சுமதி விசாரித்தார். இருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வரும் 26ம் தேதிக்கு அடுத்த விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை