உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண வாழ்த்து பேனர் வைத்தவர் மீது வழக்கு

திருமண வாழ்த்து பேனர் வைத்தவர் மீது வழக்கு

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் திருமண வாழ்த்து பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.புதுச்சேரியில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக மாவட்ட தலைமை நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து நகர வீதிகளில் வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான கடந்த 16ம் தேதி, ஆங்காங்கே இருந்த ஒன்றிரண்டு பேனர்களையும் பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் அகற்றியது.இந்நிலையில், முத்தியால்பேட்டை சின்னையாபுரம் அருகே சாலையில் திருமண வாழ்த்து பேனர் வைத்துள்ளதாக போலீசாருக்கு புகார் சென்றது. இதைத் தொடர்ந்து திருமண வாழ்த்து பேனர் வைத்த கருவடிக்குப்பம், சந்தோஷ் என்பவர் மீது முத்தியால்பேட்டை போலீசார், திறந்தவெளி சிதைவு தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை