உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெத்திசெமினார் பள்ளியில் நிழல் இல்லா நாள்

பெத்திசெமினார் பள்ளியில் நிழல் இல்லா நாள்

புதுச்சேரி: பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில், நிழல் இல்லா நாள் கடைபிடிக்கப்பட்டது.இந்த ஆண்டு, ஏப்., 21ம் தேதி, ஆக., 19ம் தேதி நிழல் இல்லா நாள். அதையொட்டி, காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் நிழல் இல்லா நாள், உப்பளம் பெத்திசெமினார் பிரைமரி பள்ளியில் கடைப்பிடிக்கப்பட்டது. தரையில் மாணவர்கள், வளையம் போல் நின்று, நிழல் இல்லா நாளை பார்த்தனர்.பள்ளி, துணை முதல்வர், ஜான்பால் வரவேற்றார். முதல்வர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் துணை தலைவர் ேஹமாவதி, நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.அறியவில் இயக்க தலைவர் மதிவாணன், கூறுகையில், 'நிழல் இல்லா நாளில் சூரியன் அதிக தொலைவில் இருக்கும். அதன்படி, நேற்று மதியம் 12:09 மணிக்கு பூமியின் ஓரு குறிப்பிட்ட பகுதியின் மீது சூரிய ஒளி நேர் செங்குத்தாக விழுந்தது. இந்த நிகழ்வு ஒரு ஆண்டிற்கு இரு முறை, கடக, மகர ரேகைகளுக்கு உட்பட பகுதியில் மட்டும் நடக்கும் நிகழ்வாகும்.அதன்படி, பெத்திசெமினார் பிரைமரி பள்ளியில் நேற்று காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை, நடந்த நிழல் இல்லா நாளை பள்ளி மாணவர்கள், அறிவியல் இயக்கத்தின் செயலர் முருகவேல், கணபதி உட்பட பலர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை