உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடல் அலையில் சிக்கி நர்சிங் மாணவி பலி

கடல் அலையில் சிக்கி நர்சிங் மாணவி பலி

அரியாங்குப்பம்: ஹோலி பண்டிகை கொண்டி விட்டு கடலில் குளித்த நர்சிங் மாணவி அலையில் சிக்கி பரிதபமாக உயிரிழந்தார்.கேளரா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் , ஆராட்டு புழா பகுதியை சேர்ந்தவர் ஜெயதாஸ். இவரது மகள் ஜெயலட்சுமி, 19; இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், சக மாணவிகளுடன் தங்கியுள்ள அறையில் ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு, நேற்று மதி யம், சக மாணவிகளுடன், சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் கடலில் குளித்து கொண்டிருந்தனர்.ஜெயலட்சுமி, இவருடன் குளித்த 2 மாணவிகள் அலையில் சிக்கினர். அங்கிருந்து மீனவர்கள் உதவியுடன், இரண்டு மாணவிகளை மீட்டனர். அதில், ஜெயலட்சுமி, அலையில் சிக்கி உயிரிழந்தார். மீட்கப்பட்ட, லட்சுமி லீனா, மரியா ஷாஜி ஆகிய இரு மாணவிகள் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி