உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிருமாம்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் தேவை

கிருமாம்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் தேவை

பாகூர் : கிருமாம்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் வசதி இல்லாத நிலையில், வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.ஏம்பலம் தொகுதி, கிருமாம்பாக்கத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில், சுற்றுப்புற கிராம இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சாப்ட் பால், பேஸ் பால், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு பயிற்சி பெற்று வரும் மைதானத்தை, கூட்டுறவு வீட்டு வசதி வாரியம் சார்பில் கையப்படுத்தப்பட்டு, மனைகளாக மாற்றப்பட்டது. விளையாட்டு திடலை மீட்க வேண்டி விளையாட்டு வீரர்களும், அப்பகுதி மக்களும் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த பயனுமில்லை.அந்த இடத்தில், எல்லை கற்கள் அமைக்கப்பட்டு மனைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவிளையாட்டு வீரர்கள், பயிற்சி மேற்கொள்ள திடல் இன்றி தவித்து வருகின்றனர்.இருப்பினும், அப்பகுதியில் உள்ள வேறு இடத்தில் புதர், செடி கொடிகளுக்கு மத்தியில் தற்போது விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.அது போதிய இட வசதியின்றி உள்ளதால், சரி வர பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.பேஸ் பால், சாப்ட் பால் பயிற்சியின் போது விளையாட்டு வீரர்கள் அடிக்கும் பந்துகள் அருகில் உள்ள தனியார் நிறுவன வளாகத்திற்குள் விழுந்து விடுவதால், பல இன்னல்களை சந்திக்கின்றனர். இதனால், விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே, கிருமாம்பாக்கத்தில் விளையாட்டு திடல் ஏற்படுத்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்