உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜனநாயக கடமையை ஆற்ற நரிக்குறவர்களுக்கு வேண்டுகோள்

ஜனநாயக கடமையை ஆற்ற நரிக்குறவர்களுக்கு வேண்டுகோள்

புதுச்சேரி: தேர்தல் நாளன்று திரண்டு வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என நரிக்குறவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வேண்டுகோள் வைத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கெடுத்தல் என்ற திட்டத்தின் கீழ் நரிக்குறவர் சமூகத்தினருக்காக பிரத்யோக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை பின்புறம் உள்ள நரிக்குறவர் காலனியில் நேற்று நடந்தது.மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் நரிக்குறவர்களிடம் கலந்துரையாடினார். ஓட்டுச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பிற வசதிகள் பற்றி எடுத்துகூறி, அவர், தேர்தல் நாளன்று திரண்டு வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் கலந்து கொண்டனர். உதவி சப் கலெக்டர் யஷ்வந்த் மீனா, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ்ராஜ் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, ஓட்டளித்தல் பற்றிய நரிக்குறவர்கள் சுலபமாக புரிந்து கொள்ள உதவும் வகையில், தேர்தல் பற்றிய வாக்காளர் விழிப்புணர்வு தகவல்கள் டிஜிட்டல் திரையில் காணொலியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை