உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரிக் ஷாவில் பயணிக்கும் ரஷ்ய குடும்பம் புதுச்சேரி நகர வீதிகளில் உலா

ரிக் ஷாவில் பயணிக்கும் ரஷ்ய குடும்பம் புதுச்சேரி நகர வீதிகளில் உலா

புதுச்சேரி, : ஆரோவில்லில் இருந்து புதுச்சேரிக்கு மிதிவண்டி ரிக் ஷாவில் பயணிக்கும் ரஷ்ய குடும்பத்தினர் செயல், அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரோவில் வாசிகளாக மாறி, பல வெளிநாட்டவர்கள், தங்களுக்கு தெரிந்த வேலைகளை செய்து கொண்டு புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் தான், ரஷ்யாவை சேர்ந்த செர்க்கேவின் குடும்பம். அவர்தனது மனைவி தான்யா மற்றும் மூன்று குழந்தைகளுடன், ஆரோவில்லில் வசித்து, அதே பகுதியில் உள்ள, ஆட்டோ மொபைல் பணிமனையில், வேலை செய்கிறார். இவரது குடும்பம், கார் மற்றும் டூவீலரில் பயணிக்காமல், ஆரோவில்லில் இருந்து புதுச்சேரிக்கு, ரிக் ஷாவில் பயணப்பட்டு வருகிறது.வெயிலோ மழையோ தாக்காத வகையில் மேல் கூரை, பக்க வாட்டில் தடுப்பு திரை என வடிவமைக்கப்பட்டுள்ள ரிக் ஷாவை, செர்க்கே எத்தனை கி.மீ. தூரமாக இருந்தாலும், அவரே மிதித்து ஓட்டி சென்று வருகிறார். இது, அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ