உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒரு நாள் கலெக்டராக பணியாற்றிய மாணவி

ஒரு நாள் கலெக்டராக பணியாற்றிய மாணவி

காரைக்கால்: காரைக்காலில் ஒருநாள் கலெக்டராக, அரசு பள்ளி மாணவி பணியாற்றினார்.காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், பள்ளி மாணவர்கள் அரசு செயல்பாடுகள் மற்றும் மக்கள் பிரச்னைகளை தீர்வு காணுதல், வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக தெறிந்து கொள்ளும் வகையிலும், பள்ளி மாணவர்கள் ஒரு நாள் கலெக்டராக பணியாற்ற, கலெக்டர் மணிகண்டன் வாய்ப்பு வழங்கி வருகிறார்.அந்த வகையில், ஒரு நாள் கலெக்டராக நிரவி ஹுசைனியா அரசு உயர்நிலை பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி தஸ்னீம் அர்ஷியா தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று, கலெக்டர் மணிகண்டன் முன்னிலையில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் மற்றும் பல்வேறு அரசு பணிகள் குறித்து கலெக்டருடன் இணைந்து செயல்பட்டார். முன்னதாக மாணவியை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.மாணவி தஸ்னீம் அர்ஷியா கூறுகையில், எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்.,படித்து கலெக்டராக வந்து மக்களுக்கு பணி செய்வேன் என்றார்.நிகழ்ச்சியில் மேல்நிலைகல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி