உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

காரைக்கால்: காரைக்காலில் ஆயுதங்களுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்பகுதியில் கத்தியுடன் திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், தலத்தெரு பேட் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரஜினி சக்தி, 28, என்பதும், அவர் மீது கஞ்சா உட்பட பல வழக்குகள் உள்ளன. இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து ரஜினி சக்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ