உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பூனைக்குட்டிக்கு பாலுாட்டும் நாய் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

பூனைக்குட்டிக்கு பாலுாட்டும் நாய் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டில் பூனை குட்டிக்கு, நாய் ஒன்று பாலுாட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை சாலை தில்லையம்மன் கோவில் அருகே நேற்று காலை பசியில் சுற்றித் திரிந்த பூனை குட்டிக்கு, குட்டி ஈன்ற நாய் ஒன்று பாலுாட்டி பசியாற்றியது. இயற்கையாகவே பூனையை கண்டால் எதிரியாக நினைத்து சீரும் குணம் கொண்ட நாய், நேற்று பூனை குட்டிக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பாலுாட்டிய சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.நாய், பூனை குட்டிக்கு பாலுாட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை