உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காமீஸ்வரர் கோவிலில் இன்று ஆடிப்பூர தேர் திருவிழா

திருக்காமீஸ்வரர் கோவிலில் இன்று ஆடிப்பூர தேர் திருவிழா

வில்லியனுார் : வில்லியனுார் கோகிலாம்பிகை உடனுறை திருகாமீஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் தினம்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் நடந்துவருகிறது. இரவு 7:30 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வானவேடிக்கையுடன் மாட வீதியுலா நடந்துவருகிறது.முக்கிய விழாவாக ஆடிப்பூர தேர் திருவிழா (இன்று 6ம் தேதி) நடைபெறுகிறது. காலை 8:15 மணியளவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து துவக்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து நாளை7 ம் தேதி காலை தீர்த்தவாரி மற்றும் வளையல் உற்சவமும், 8ம் தேதி இரவு 7:30 மணிக்கு தெப்பல் உற்ச்சவமும், 9ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ