உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நேஷனல் ஆங்கில பள்ளி 10 வகுப்பு தேர்வில் சாதனை

நேஷனல் ஆங்கில பள்ளி 10 வகுப்பு தேர்வில் சாதனை

பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.மாணவிகள் பூஜா, வேல்விழி 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவர் சரண்ராஜ் 492 பெற்று இரண்டாம் இடமும், மாணவிகள் லாவண்யா, நஜியா தபஸ்சும், ஷாஜினா ஆகியோர் 490 பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.52 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ் பாடத்தில் 32 மாணவர்கள், ஆங்கிலத்தில் 38 மாணவர்கள், கணிதத்தில் 45 மாணவர்கள், அறிவியலில் 46 மாணவர்கள், சமூக அறிவியலில் 41 மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஒரு மாணவியும், சமூக அறிவியலில் இரண்டு மாணவிகள், கணிதத்தில் 9 மாணவர்கள் 100க்கு 100 மதிபெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பள்ளி தலைவர் டாக்டர் கிரண்குமார், தாளாளர் டாக்டர் எழிலரசி கிரண்குமார் ஆகியோர், அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ -மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.பள்ளி சேர்மன் டாக்டர் கிரண்குமார் கூறுகையில்'' கிராமப்புற அளவில் ஒவ்வொரு ஆண்டும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனுப்பி, சிறந்த மதிப்பெண்கள் பெற செய்து, அவர்களின் எதிர்காலத்திற்கு சிறப்பான ஒரு அடி தளத்தை அமைத்து வருகிறோம். கல்வியுடன், ஒழுக்கம், விளையாட்டு மற்றும் தனி திறமைகளை கண்டறிந்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்றார்.'' தலைமை ஆசிரியை உமா உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை