உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நான்கு வழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த புதுச்சேரி, கடலுார் அதிகாரிகளின் நடவடிக்கை தேவை

நான்கு வழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த புதுச்சேரி, கடலுார் அதிகாரிகளின் நடவடிக்கை தேவை

போக்குவரத்து முக்கியத் துவம் வாய்ந்த நான்கு வழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்துவதற்கு புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகள் நான்கு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டமாக, விழுப்புரம் - புதுச்சேரி வரையிலான 29 கிலோ மீட்டருக்கு பணிகள் முடிந்து தற்காலிகமாக வாகனங்கள் செல்கிறது.இரண்டாம் கட்டமாக, புதுச்சேரி எம்.என்.குப்பம் முதல், கடலுார் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கி.மீ., தொலைவுக்கு பணிகள் நடந்து வருகிறது. இதில் 12 கி.மீ., புதுச்சேரியிலும், 26 கி.மீ., தமிழக பகுதியிலும் அமைந்துள்ளது.புதுச்சேரி பகுதியில் 60 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாகூர், கோர்க்காடு பகுதிகளில் அதி உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் அந்த பகுதிகளில் பணிகள் நடக்க வில்லை. அங்கு மாற்று டவர் அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் அரசு தரப்பில் தாமதம் நிலவுகிறது.

என்ன பிரச்னை?

புதுச்சேரி வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. நெய்வேலியில் இருந்து மின்சாரம் வருகின்ற அதி உயர் மின்னழுத்த பாதைகள் குறுக்கிடும் இடங்களில் மட்டுமே பிரச்னை உள்ளது.உயர் மின்னழுத்த பாதைகள் மிகுந்த ஆபத்தானவை. தரையில் இருந்து 9 மீட்டர் உயரத்திற்கு மேல் மின் கம்பிகள் அமைந்திருக்க வேண்டும். ஆனால், மேம்பாலம் அமையும் இடங்களில் மின் கம்பிகள் செல்லும் உயரம் குறைந்து விடுகிறது.இது, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக இருக்கும் என்பதால் மின் கோபுரங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது.ஆனால், விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக உடனடியாக மாற்றப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த நேரத்தில் மின் கோபுரங்களை மாற்றுவது அவர்களது விளைச்சலை பாதிக்கும் என்பதால் காத்திருக்க வேண்டியுள்ளது.மேலும், தேர்தல் நன்னடத்தை விதிகள் முழுமையாக அமலில் இருக்கும்போது, புதுச்சேரி அரசின் உத்தரவு இல்லாமல் நிலத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது. இதன் காரணமாகவே, மின் கோபுரங்கள் மாற்றும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.சில இடங்களில் மின் கோபுரங்களின் உயரத்தை அதிகரித்து பிரச்னைக்கு தீர்வு காணலாம். ஆனால், அந்த இடங்களில் தோண்டும்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மீண்டும் இழப்பீடு கேட்கின்றனர்.மின் கோபுரங்களை முற்றிலும் இடமாற்றி வைக்காமல் உயரத்தை அதிகரித்து நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த முடியும். ஆனால், என்.எல்.சி., நிறுவனத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்ய முடியாது. இப்படி பல சிக்கல்கள் உள்ளதால் காலதாமதம் ஆகிறது' என்றனர்.

சப்பைக்கட்டு வேண்டாமே

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைக்காக விவசாயிகள் தங்களுடைய பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை கொடுத்து ஒத்துழைப்பு தந்துள்ளனர். இந்த திட்டத்தில் அரசியல் கலப்பு இல்லை.தேர்தல் துறையை, புதுச்சேரி அரசு அணுகினால் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்க போவதில்லை. எனவே, தேர்தல் நன்ன டத்தை விதிகள் என்று சப்பைக்கட்டு கட்டாமல், என்.எல்.சி., நிறுவனத்தை உடனடியாக அணுகி, மின் கோபுரங்களை விரைவாக மாற்றவும், உயரத்தை அதிகரிக்கவும் புதுச்சேரி அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலுார் அதிகாரிகள் விளக்கம்

- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை