மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி முத்தரையர்பாளையம் ஆதித்யா பாரதிதாசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.பள்ளி மாணவி பத்மசுதா 576 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார்.மாணவி அர்ச்சனா 569 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம், மாணவி ஜன்னத்துல் பிர்த்தெளஸ் 558 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம் பிடித்தனர்.கணினி அறிவியல் பாடத்தில் மூன்று மாணவர்களும்,பிரெஞ்சு பாடத்தில் ஒரு மாணவியும், வணிகவியல் பாடத்தில் ஒரு மாணவியும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார்.64 மாணவர்கள் உயர் சிறப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஆதித்யா பாரதிதாசன் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது.மாணவி கனிஷ்கா 495 மதிப்பெண்ணுடன் முதலிடம்,மாணவி யுவஸ்ரீ 482 பெற்று இரண்டாம் இடம்,மாணவர் சத்யஜித் 469 பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து சாதித்துள்ளனர்.12 மாணவர்கள் உயர் சிறப்பு வகுப்பில் தேர்ச்சிபெற்றனர். சாதித்த மாணவர்களை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன்,தாளாளர் அசோக் ஆனந்த்,வித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி பாராட்டினர். இதேபோல், பள்ளி முதல்வர், துணை முதல்வர், பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன் கூறும்போது, பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்கள்,அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள்,பெற்றோர்களுக்கு பாராட்டுகள். ஆதித்யா கல்வி குழுமத்தில் அகில இந்திய அளவில் நடக்கும் நீட்,ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ்டு ஒருங்கிணைந்த பயிற்சிகள் ஆறாம் வகுப்பில் இருந்து பிளஸ்2 வரை நடத்தப்படுகிறது என்றார்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago