| ADDED : ஜூன் 09, 2024 02:58 AM
புதுச்சேரி, : புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளி மாணவர்கள் அகில இந்திய அளவில் நடந்த 'நீட்' தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.அகில இந்திய அளவில் கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் பங்கேற்ற புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளி மாணவர் கிருஷ்ணவ் 720க்கு 690 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். நீதர்ஷணா-687, பிரதீப் சக்கரவர்த்தி-686 மதிப்பெண் பெற்றனர்.இப்பள்ளியில் 680க்கு மேல் 8 பேர், 650க்கு மேல் 18 பேர், 625க்கு மேல் 26 பேர், 600க்கு மேல் 34 பேர், 575க்கு மேல் 39 பேர், 550க்கு மேல் 51 பேர், 500க்கு மேல் 66 பேர், 475க்கு மேல் 73 பேர், 450க்கு மேல் 83 பேர் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்ய நாராயண அறக்கட்டளை டரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.பள்ளி நிறுவனர் ஆனந்தன் கூறுகையில், 'அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவு தேர்விற்கு (சி.ஏ.பவுண்டேஷன், ஐ.ஏ.எஸ். பவுண்டேஷன்) ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 6ம் வகுப்பு முதல் ஆதித்யா கல்விக் குழுமத்தில் கற்பிக்கப்பட்டு மாணவர்களின் பன்முகத்திறனை மேம்படுத்தி வெற்றியாளர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்' என்றார்.