மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் அவசர மருத்துவ சிகிச்சை குறித்து ஆய்வு செய்வதற்கான ஐ.சி.எம்.ஆர்., நிறுவனத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்தியாவில் புதுச்சேரி உள்பட ஐந்து நகரங்களில் அளிக்கப்படும் அவசர மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்ய ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆரய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.இந்தியா- இ.எம்.எஸ்., என்ற திட்டத்தின் கீழ், இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்துள்ளது. புதுச்சேரியில் அவசர சிகிச்சை தொடர்பாக, ஆய்வு செய்ய புதுச்சேரி சுகாதார துறை, ஜிப்மர், அரசு மருத்துவ கல்லுாரியுடன் ஐ.சி.எம்.ஆர்., நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதன் முதல் கூட்டம், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் டில்லி ஐ.சி.எம்.ஆர்., தலைமையக விஞ்ஞானி மீனாட்சி சர்மா, லுாதியானா சி.எம்.சி., கல்லுாரி டீன் ஜெயராஜ் பாண்டியன், புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரி இயக்குனர் உதயசங்கர் கலந்து கொண்டனர்.மாரடைப்பு, பக்கவாதம், விஷம் அருந்தியது, பாம்பு கடி, விபத்து, சுவாச பிரச்னை, மனநலம் உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து விரிவான ஆராய்ச்சி செய்ய உள்ளது. இந்த அறிக்கை ஐ.சி.எம்.ஆர்., மூலமாக மத்திய அரசுக்கும் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆய்வு கூட்டத்தில் துணை இயக்குனர்கள் ரகுநாதன், ரமேஷ் கலந்து கொண்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago