மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
12 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
12 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில், மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியாக ரூ.10, ஆயிரம், மழைக்கால உதவித்தொகை ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக, அவர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனு; தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்திற்கு, ரூ.8 ஆயிரம், மழைக்கால நிவாரண உதவியாக ரூ. 6 ஆயிரம், மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. புதுச்சேரி அரசு, மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.6 ஆயிரத்து 500, மழைக்கால நிவாரண உதவித் தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.மத்திய அரசின் குறைந்தபட்ச கீழ் நிலை தொழிலாளர்களுக்கு ரூ.320 தினக்கூலியாக வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. மீன்பிடி தடைக்காலத்திற்கு 61 நாட்களுக்கு 19 ஆயிரத்து 520 ரூபாய் இழப்பீட்டு தொகையாக அரசு வழங்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கு நிவாரண உதவியை கூட மீனவர்களுக்கு வழங்காதது சரியான முடிவு அல்ல. புதுச்சேரி பகுதியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக மீனவ கிராமங்களில் குறிப்பிட்ட அளவில் நிவாரணம் வழங்கும் போது, அவர்களை விட குறைந்த மானிய உதவி வழங்குவது சரியானது அல்ல. முதல்வர், மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியாக ரூ.10, ஆயிரமும், மழைக்கால உதவித்தொகையாக ரூ.6 ஆயிரமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago