உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆஞ்சநேயர் கோவில் லட்சதீப விழா 

ஆஞ்சநேயர் கோவில் லட்சதீப விழா 

திருக்கனுார் : கைக்கிலப்பட்டு சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவிலில், லட்சதீப விழா, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருக்கனுார் அடுத்த கைக்கிலப்பட்டு கிராமத்தில் விஸ்வரூப சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 33ம் ஆண்டு மகோற்சவ லட்சதீப விழா நேற்று முன்தினம் நடந்தது.இதையொட்டி, காலை 7:30 மணிக்கு ஹோமம் லச்சார்ச்சனை, காலை 10:00 மணிக்கு சந்தான காப்பு அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, மாலை 4:30 மணிக்கு சீதை, ராமர் திருக்கல்யாண உற்சவமும், மாலை 6:00 மணிக்கு குளக்கரை சுற்றியிலும் லட்ச தீப ஏற்றப்பட்டது.விழாவில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை