மேலும் செய்திகள்
தினமலர்- - பட்டம் இதழ் அறிவு பெட்டகம்
23 hour(s) ago
காரைக்கால் பெண்ணிடம் 50 சவரன் நகை மோசடி
23 hour(s) ago
ஆரோவில்லில் தங்கியிருந்த இலங்கை அகதி, முகாமில் ஒப்படைப்பு
23 hour(s) ago
புதுச்சேரி: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கூட்டுறவு மேலாண் இயக்குநர் மாறன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான, ஒரு ஆண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேருவற்கு வரும் 1-08-2024 அன்று, 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சி அடைந்திருக்கு வேண்டும். மேலும், பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இந்த பட்டயப் பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை, நிர்வாகம் வங்கியல், கணக்கியல் உள்ளிட்ட பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்ட சான்றிதழ், கணிணி மேலாண்மை சான்றிதழ், நகை மதிப்பீடு நுட்பங்கள் ஆகிய சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் மூலம், கூட்டுறவு வங்கி, தேசிய வங்கி, தனியார் வங்கி, நிதி நிறுவன பணியில் சேருவதற்கு இந்த பட்டய சான்றிதழ் பயனுள்ளதாக இருக்கும். இந்த பயிற்சியில் சேருவதற்கு, கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் www.tncu.tn.gov.inஇணைய மூலம் ரூ. 100 செலுத்தி பதிவேற்றப்பட்ட விண்ணபத்தினை பதிவிறக்கம் செய்து, பயிற்சியில் சேர விரும்புவோர், சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வரும் 31ம் தேதி நேரில் வரவும். சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் தங்களது இரண்டு புகைப்படங்கள், ஒரிஜினல், கல்விச்சான்றிழ்களுடன் நேரில் வந்து பயிற்சி கட்டணத்தை செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 0143 - 2331408, 2220105 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago