உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி : தொடக்க கல்வி பட்டய தேர்வு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.இது குறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மைய முதல்வர் சுகுணா சுகிர்த பாய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:வரும் ஜூன்,ஜூலை மாதம் நடக்க உள்ள தொடக்க கல்வி பட்டய தேர்விற்கு தனித்தேவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையம் வழியாக விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து,அவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து,ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து அனுப்ப வேண்டும்.இந்த விண்ணப்பித்தினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் வெப் கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை டவுண்லோடு செய்து தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.ஒவ்வொரு பாடத்திற்கும் 50 ரூபாய்,முதலாமாண்டு மதிப்பெண் சான்றிதழ்100 ரூபாய், இரண்டாமாண்டு மதிப்பெண் சான்றிதழ் 100 ரூபாய், பதிவு மற்றும் சேவைக்கட்டணம் 15 ரூபாய், ஆன்-லைன் பதிவு கட்டணம்70 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

சிறப்பு அனுமதி திட்டம்

அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 6 ம்தேதி வரை விண்ணப்பிக்க தவறியவர்கள் தக்கல் எனப்படும் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 10 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.சிறப்பு அனுமதி கட்டணம் 1,000 ரூபாய். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி