உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க., விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் 

தி.மு.க., விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் 

திண்டிவனம் : தி.மு.க., விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடி மகன் கவுதம் சிகாமணி, வடக்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர் டாக்டர் சேகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.லோக்சபா தேர்தலுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் மாற்றம் இருக்கும் என, கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதன்படி, மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தி.மு.க.,பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஸ்தான்(சிறுபான்மை நலத்துறை அமைச்சர்), அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திண்டிவனத்தை சேர்ந்த டாக்டர் சேகர்(விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,.அவைத்தலைவர்) வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் பல மாதங்களாக நீடித்து வந்தது. குறிப்பாக அமைச்சர் பொன்முடிக்கும், மஸ்தான் ஆதரவாளர்களுக்குள் கோஷ்டி பிரச்னை இருந்து வந்தது. இதுகுறித்து அடிக்கடி கட்சி தலைமைக்கு தொடர்ந்து நிர்வாகிகள் சார்பில் புகார்கள் சென்றது. இந்நிலையில் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் மஸ்தானின் தீவிர ஆதரவாளரான திண்டிவனம் டாக்டர் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.,டாக்டர் மாசிலாமணி, செஞ்சி சிவா இருவரில் ஒருவருக்கு கிடைக்கும் என, எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக மஸ்தான் ஆதரவாளரான திண்டிவனம் சேகருக்கு வழங்கப்பட்டுள்ளது, கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுதம்சிகாமணி நியமனம்

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த புகழேந்தி மறைவையொட்டி, அமைச்சர் பொன்முடி மகன் டாக்டர் கவுதமசிகாமணி, விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ