| ADDED : மே 17, 2024 05:35 AM
புதுச்சேரி: புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சாதனை பாராட்டு விழா நடந்தது. விழாவில், சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இன்டர்நெட் ஆப் திங்ஸ் மற்றும் டிஜிட்டல் இன்ஜினியரிங் பிரிவு சர்வதேச மனித வளத்துறை தலைவர் லட்சுமண் பிரகாஷ், பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை, கல்வியில் சாதனை புரிந்த பேராசிரியர்கள், மாணவர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கினார்.திண்டிவனம் தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கி பேசுகையில், வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்கள் எந்தத் துறையில், பணிபுரிய நேர்ந்தாலும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு உழைத்து முன்னேற வேண்டும்' என்றார்.மணக்குள விநாயகர் கல்விக் குழும செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். டி.சி.எஸ். நிறுவன மனித வளத்துறை அதிகாரிகள் ராஜலட்சுமி, விமல் பங்கேற்றனர். வேலை வாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார், வேலை வாய்ப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆண்டறிக்கை வாசித்தார். மேலாண்மை துறை பேராசிரியர் வைத்தீஸ்வரன் நன்றி கூறினார்.மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், பொறியியல் கல்லுாரி வேலைவாய்ப்பு துறை தலைவர் கைலாசம், மயிலம் பொறியியல் கல்லுாரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.