உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரியப்பாளையம் உயர்மட்ட பாலம் ஜூன் மாதத்தில் திறக்க முடிவு

ஆரியப்பாளையம் உயர்மட்ட பாலம் ஜூன் மாதத்தில் திறக்க முடிவு

புதுச்சேரி : ஆரியப்பாளையத்தில் ரூ.59 கோடி மதிப்பில் கட்டப்படும் சங்கராபரணி ஆறு உயர்மட்ட பாலம் ஜூன் மாதம் திறக்க முடிவு செய்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், எம்.என்.குப்பம் முதல் இந்திரா சிக்னல் வரையிலான 11.24 கி.மீ., சாலையை ரூ. 59.49 கோடி மதிப்பில் அகல்படுத்த அரசு முடிவு செய்தது.எம்.என்.குப்பம் முதல் அரும்பார்த்தபுரம் வரை 6.9 கி.மீ., கிராமப்புற சாலை. இச்சாலையை நான்கு வழிச்சாலை தரத்துடன் அமைப்பதால், மீதமுள்ள 3.4 கி.மீ துார நகர்புற சாலையில், அகலப்படுத்த போதிய நிலம் இல்லாததால் தற்போது உள்ள சாலையோரம், 'யு' வடிவ கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தார் சாலையுடன் சென்டர் மீடியன் அமைக்க முடிவு செய்தனர்.இத்துடன், ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே இருபுறமும் அணுகு சாலையுடன், 18 மீட்டர் அகலம், 365 மீட்டர் நீளத்தில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க கடந்த 2022 பிப்., 11ம் தேதி பணிகள் துவங்கியது. கட்டுமான பணிகளை முடித்து ஒப்படைக்க 24 மாதம் அவகாம் வழங்கப்பட்டது.கட்டுமான பணியில் 90 சதவீதம் முடிந்து விட்டது. உயர்மட்ட பாலத்தின் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுதவிர எம்.என்.குப்பம் முதல் இந்திரா சிக்னல் வரை முதல் லேயர் தார் சாலை அமைத்து சென்டர் மீடியன் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே கட்டுமான பணிக்கு வழங்கிய 2 ஆண்டுகள் முடிந்து விட்டது. பணிகள் முடிந்து ஜூன் மாதத்தில் பாலத்தை திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியளர் பாலசுப்ரமணியன் கூறுகையில், 'கட்டுமான பணி வேகமாக நடந்து வருகி றது. ஜூன் மாதத்தில் பாலம் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை