உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் கலை திருவிழா

அரசு பள்ளியில் கலை திருவிழா

புதுச்சேரி: பண்டசோழநல்லுார் அரசு துவக்கப் பள்ளியில் கல்வி வார விழாவை முன்னிட்டு கலை திருவிழா பள்ளி வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஆசிரியை சரளா வரவேற்றார். ஆசிரியைகள் சர்மிளா, மேகளா, மோகனலட்சுமி,சத்தியபிரியா ஆகியோர் வாழ்துரை வழங்கினர். விழாவில் பள்ளி மாணவர்கள் தேசத்தலைவர்கள் வேடம் அணிந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ