உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊழியர் மீது தாக்குதல்

ஊழியர் மீது தாக்குதல்

பாகூர்: ஸ்பின்கோ ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருமாம்பாக்கம் அடுத்துள்ள மணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன் 52; ஸ்பின்கோ ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பரை சந்திக்க காட்டுக்குப்பம் வந்துள்ளார். பின்னர், மாலை 6 மணியளவில் அங்கிருந்து பைக்கில் புறப்பட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கன்னியக்கோவில் பழைய சாராயக்கடை அருகே சென்ற போது, வார்க்கால்ஓடையை சேர்ந்த அபிராஜ், விமல்ராஜ் இருவரும் வழிமறித்து அவரை ஆபாசமாக திட்டி, தாக்கி உள்ளனர்.ஆனந்தகிருஷ்ணன் புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி