உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் கம்பெனி ஊழியர் மீது தாக்குதல் 

தனியார் கம்பெனி ஊழியர் மீது தாக்குதல் 

திருக்கனுார், : சோரப்பட்டில் பைக்கில் வேகமாக சென்றதை தட்டிக் கேட்ட தனியார் கம்பெனி ஊழியரை கல்லால் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு டி.வி., சென்டர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், 34; தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் அருகே நின்றிருந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த தஷ்ணாமூர்த்தி என்பவர் பைக்கில் வேகமாக சென்றார்.இதனை சதீஷ்குமார் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த தஷ்ணாமூர்த்தி, தனது நண்பர்கள் புகழ், கல்மேடுபேட் பகுதி அஜித்குமார், விஜய் ஆகியோருடன் சேர்ந்து சதீஷ்குமாரிடம் தகராறு செய்து, அவரை கருங்கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், தஷ்ணாமூர்த்தி உட்பட 4 பேர் மீது திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை