உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா

அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா

புதுச்சேரி : அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு சார்பில், அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 'ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சிறந்த மாணவர் விருது' வழங்கும் விழா நடந்தது. மூலக்குளம் தனியார் மஹாலில் நடந்த விழாவிற்கு, பேராசிரியர் கோகுல்ராஜ் வரவேற்றார். மாணவர் யுவராஜ் தலைமை தாங்கினார். விழாவில், சொர்ணாம்பிக்கை ஐ.பி.எஸ்., கலந்து கொண்டு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் 300க்கும் மேற்பட்டோருக்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சிறந்த மாணவர் விருதினை வழங்கி, பாராட்டினார்.பேராசிரியர் இளையராஜா, வழக்கறிஞர் அருண்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவி கோகிலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை புதுச்சேரி அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்