உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நகர்ப்புற வளர்ச்சி முகமைக்கு சிறந்த  செயல் திறனுக்கான பரிசு

நகர்ப்புற வளர்ச்சி முகமைக்கு சிறந்த  செயல் திறனுக்கான பரிசு

புதுச்சேரி: புதுச்சேரி உள்ளாட்சி துறையின் கீழ் இயங்கும் நகர்ப்புற வளர்ச்சி முகமைக்கு சிறந்த செயல் திறனுக்கான பரிசு வழங்கப்பட்டது.உள்ளாட்சி துறை கீழ் செயல்படும் நகர்ப்புற வளர்ச்சி முகமை, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகள், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.அதில், ஓர் அங்கமாக தெருவோர விற்பனையாளர் திட்டம் மற்றும் விற்பனையாளர் சந்தை மேம்பாடு போன்ற துறையின் மூலம், வியாபாரிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளித்து கடன் வழங்கி மேம்படுத்தி வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில், மத்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சார்பில், விருது வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் நடந்தது.அதில், புதுச்சேரி மாநிலத்திற்கு அதிகளவில், கடன் வழங்கி நகர்ப்புற மற்றும் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதற்காக சிறந்த செயல்திறனுக்கான 2ம் பரிசு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் மனோகர்லால் மற்றும் இணை அமைச்சர் டோகன் சாகு ஆகியோர் பரிசு வழங்கினர். புதுச்சேரி சார்பில், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் விருதினை பெற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்