| ADDED : ஆக 21, 2024 06:28 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த முப்பெரும் விழாவில் நாடகக் கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.புதுச்சேரி, ஆந்திர மகா சபை கலையரங்கில், கண்மணி கிரியேஷன்ஸ் சார்பில், முப்பெரும் விழா-2024, பரிசளிப்பு விழா நடந்தது. புதுச்சேரி தமிழ்ச்சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். கண்ணன், செல்வநாதன், நிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் தலைவர் ராஜா வரவேற்றார். மயிலம் பொம்மபுர ஆதீனம், 20ம் பட்டம், சிவ ஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். எதிர்க் கட்சித் தலைவர் சிவா கலைஞர்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கினார். கலைப்பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் சான்றிதழ் வழங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக, புதுச்சேரி தமிழ்ச்சங்க செயலாளர் மோகன்தாஸ், சுங்கம் மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.