உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு

இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு

புதுச்சேரி : உறுப்பு தான தினவிழாவையொட்டி, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.உறுப்பு தான தினவிழாவையொட்டி,இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பல்வேறு நர்சிங் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். உறுப்பு தானம் குறித்து வினாடி வினா போட்டி நடந்தது. அந்த போட்டியில், ஏ.ஜி., பத்மாவதி நர்சிங் கல்லுாரி மாணவிகள் முதல் பரிசும், ஈஸ்ட் கோஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லுாரி மாணவிகள் இரண்டாம் பரிசும், சபரி நர்சிங் கல்லுாரி மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.பேட்டியில் வெற்றி பெற்ற நர்சிங் கல்லுாரி மாணவிகளுக்கு, மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேல் பரிசு வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், குறைதீர்க்கும் அலுவலர் ரவி உட்பட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.நோடல் அதிகாரி குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ