உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதியார் பல்கலைக் கூடத்தில் விழிப்புணர்வு ஓவிய போட்டி

பாரதியார் பல்கலைக் கூடத்தில் விழிப்புணர்வு ஓவிய போட்டி

புதுச்சேரி: துாய்மை இந்தியா விழிப்புணர்வு ஓவிய போட்டியில் பாரதியார் பல்கலைக் கூட மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தில், மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிட்., தெற்கு மண்டலம் சார்பில், துாய்மை இந்தியா மற்றும் ஆரோக்கிய இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது.பாஸ்கர் எம்.எல்.ஏ., கல்லுாரி முதல்வர் அன்னபூர்ணா, நுண் கலைத்துறை தலைவர் பிரபாகரன், துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஓவிய போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியில் ஆர்வமாக பங்கேற்ற பாரதியார் பல்கலைக் கூட மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியங்களை தீட்டினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை