உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேட்மிட்டன் போட்டி பரிசளிப்பு விழா

பேட்மிட்டன் போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆருத்ரா நகர் குருவாலயம் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்தது.இதில், 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தனித்தனியாக போட்டிகள் நடந்தன.போட்டியில், 14 வயதிற்கான பெண்கள் பிரிவில் வர்ஷினி, ஆண்கள் பிரிவில் வசீகரன் ஆகியோர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார். 17 வயது பெண்கள் பிரிவில் சிந்துஜா, ரவுபாரி, ஆண்கள் பிரிவில் முகமது ஜாஸீர், அன்ருச் நரசிம்மா ஆகியோர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சங்க செயலாளர் பாசித் தலைமையில் நடந்தது. சங்க நிர்வாகிகள் சத்தியபுவனம் மற்றும் ஐயப்பன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி கிளப் செயலாளர் பிரகாஷ், முத்து ராமன், வழக்கறிஞர் சரவணன், டிப் எனேபிள் பவுண்டேஷன் மேலாளர் ஞானவேல், பேட்மிட்டன் பயிற்சியாளர் கணபதி விவேகானந்தன், அபிலா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி