உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொன்னியம்மனுக்கு பால்குட அபிேஷகம்

பொன்னியம்மனுக்கு பால்குட அபிேஷகம்

புதுச்சேரி; ரோடியர்பேட் பொன்னியம்மன் கோவிலில், பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து அம்மனை வழிப்பட்டனர். கடலுார் சாலை ஏ.எப்.டி., மைதானம் அருகே பொன்னியம்மன் கோவில் உள்ளது. ஆடி வெள்ளியையொட்டி, ஏழை மாரியம்மன் கோவிலில் இருந்து பொன்னியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து பொன்னியம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை களுடன், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை