உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மரில் சிகிச்சை பெறுபவர்களிடம் பா.ஜ., பொறுப்பாளர் நலம் விசாரிப்பு

ஜிப்மரில் சிகிச்சை பெறுபவர்களிடம் பா.ஜ., பொறுப்பாளர் நலம் விசாரிப்பு

புதுச்சேரி: கள்ளச்சாராயத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை, கர்நாடகா - தமிழ்நாடு பா.ஜ., இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சந்தித்து நலம் விசாரித்தார்.கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிப்பு அடைந்த பலர், புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களை, கர்நாடகா - தமிழ்நாடு பா.ஜ., இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நேற்று ஜிப்மர் மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.டாக்டர்களிடம், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த கேட்டறிந்தவர்,நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.அவர்கள் விரைவில் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்புவார்கள் என்று உறவினர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார். அசோக்பாபு எம்.எல்.ஏ., தமிழக பா.ஜ., செயலாளர் சுரேஷ், திண்டிவனம் பொறுப்பாளர் புருஷோத்தமன், புதுச்சேரி பா.ஜ., நிர்வாகிகள் புகழேந்தி, ரஞ்சித், குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்