உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எங்க கட்சிக்கு வாங்க! ம.மு.க., அழைப்பு

எங்க கட்சிக்கு வாங்க! ம.மு.க., அழைப்பு

புதுச்சேரி : 'உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் மாற்று கட்சியினர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைய வேண்டும்' என அக்கட்சியின் சேர்மன் வெங்கட்டராமன் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி அரசியலில் தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகமாகும்.உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் மாற்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மக்கள் நலன் கருதி, புதுச்சேரி மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை