உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கொடாத்துார் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 52; இவரது மனைவி போகவதி. இவர்களுக்கு சுமித்ரா, சுனிதா என்ற இரண்டு மகள்கள், தேவா என்ற ஒரு மகன் உள்ளனர். தேவா, இளம் பெண் ஒருவரை காதலித்து வருவதாக தெரிகிறது. இதையறிந்த பெண்ணின் உறவினர் ஆவுடையார்பட்டு சுக்குராஜ், அவரது நண்பர்கள் தமிழ்ச் செல்வன், கோபி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தேவா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கினர். தடுக்க வந்த தேவாவின் மாமன் சுமன்ராஜ், அக்கா சுனிதா ஆகியோரையும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில், சுக்குராஜ் அவரது நண்பர்கள் தமிழ்ச்செல்வன், கோபி ஆகியோர் மீது திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி