மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
கடலுார் : வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கடலுார் அடுத்த வாழப்பட்டை சேர்ந்தவர் ராஜ்திலக்,33; கடலுார் மஞ்சக்குப்பம் மின்வாரிய அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார்.இவருக்கும் கடலுார் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த கவிப்பிரியா,28; என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. கவிப்பிரியாக கடலுார் புள்ளியியல் துறையில் ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இவர்கள் கோண்டூரில் வசித்து வந்தனர்.திருமணத்தின் போது கவிப்பிரியாவிற்கு அவரது பெற்றோர் 50 சவரன் நகை, ராஜ்திலக்கிற்கு 15 சவரன் நகை மற்றும் பைக் வாங்க 1 லட்சம் ரூபாய் சீர்வரிசையாக கொடுத்தனர். இந்நிலையில், கார் வாங்க ராஜ் திலக் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கவிபிரியாவிடம் ரூ.10 லட்சம் கேட்டு துன்புறுத்தினார். மேலும் காஸ் சிலிண்டரை திறந்து விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதுகுறித்து கவிபிரியா அளித்த புகாரின்பேரில் ராஜ் திலக், அவரது தாய் பாரதி, சகோதரிகள் சுகாசினி, காயத்திரி ஆகியோர் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago