உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் அருகே மொபைட்டில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

வில்லியனுார் அருகே மொபைட்டில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வில்லியனுார்அருகே உள்ள உறுவையாறு ஆச்சாரியாபுரம் கணபதி நகரை சேர்ந்த சித்ரா,43; கணவரை இழந்த இவர், வில்லியனுார் பைபாசில் உள்ள காய்கறி கடையில் பில் போடும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு, சித்ரா தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஆச்சாரியாபுரம் கணபதி நகர் பகுதியில் சென்றபோது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற சித்ராவின் மொபட்டின் மீது மோதி கீழே தள்ளிவிட்டனர். நிலை தடுமாறி கீழே விழுந்த சித்ராவை, துாக்குவதை போன்று அருகே சென்ற மர்ம நபர்கள் சித்ராவின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.இது குறித்து சித்ரா கொடுத்த புகாரின்பேரில் மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழங்குப் பதிந்து செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துவருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை