உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் தேர் பவனி

துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் தேர் பவனி

புதுச்சேரி : துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா 117ஆம் ஆண்டு பெருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது. புதுச்சேரி சுப்பையா சாலை, ரயில் நிலையம் அருகே துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளது. ஆலயத்தின் 117ம் ஆண்டு பெருவிழா கடந்த மே 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடந்து, கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. முக்கிய விழாவான ஆடம்பர தேர் பவனி நேற்று மாலை 6:30 மணிக்கு முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மறைமாவட்ட பேராயர் நீதிநாதன், துாத்துக்குடி மறைமாவட்ட பேராயர் இவோன் அம்புரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தனராக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரத்தனை செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை