மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி : வருவாய்த்துறை பிரச்னைகளை யோசிக்க முதல்வருக்கு நேரமில்லாததால், அத்துறையை தனி அமைச்சரிடம் துறையை ஒப்படைக்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை விடுத்தார்.அவர் கூறியதாவது;வருவாய்த்துறையில் ஊழியர் பற்றாக்குறையால் பள்ளி கல்லுாரி சேர்க்கைக்கு சாதி சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். 10ம் வகுப்பில் பெறும் சாதி சான்றிதழ் உயர்கல்வியில் சேரும்போது ஏற்க வேண்டும்.வரும் 31ம் தேதிக்குள் சான்றிதழ்கள் பெற்று பள்ளி கல்லுாரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றகாலக்கெடுவை, ஜூன் 10ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். இப்பிரச்னையை யோசித்து தீர்க்க தனி அமைச்சர் இல்லை. வருவாய் துறையை முதல்வர் கவனிப்பதால் அவருக்கு யோசிக்க நேரம் இல்லை. அதனால் வருவாய்துறையை தனி அமைச்சரிடம் ஒப்படைக்க வேண்டும்.புதுச்சேரியில் அறிவிக்கப்படாத மின்தடை உள்ளது. மின்துறை அமைச்சரின் தொகுதியில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு, குடியிருப்புகளுக்கு மின்தடை ஏற்படுகிறது. அரசு உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் உதவியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும். மறுத்தால் சி.பி.ஐ.,க்கு செல்வோம்.புதுச்சேரியில் போதை பொருள் விற்பனையை தடுக்க முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய வியாபாரிகளை கைது செய்யவில்லை. சில்லரை விற்பனையாளர்கள் மட்டுமே சிக்குகின்றனர்' என்றார்.பேட்டியின் போது, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., கட்சியின் விவசாயிகள் பிரிவு அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ்ஆகியோர் உடனிருந்தார்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago