மேலும் செய்திகள்
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
3 minutes ago
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
11 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
11 minutes ago
குட்கா விற்றவர் கைது
16 minutes ago
அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. பள்ளி கல்வி துறை இயக்குனர் பிரியதஷ்னி வரவேற்றார். பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தீரர் சத்தியமூர்த்தி அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் 40 பேர், அரியாங்குப்பம் இமாக்குலேட் பள்ளி மாணவிகள் 142 பேருக்கு இலவச லேப்டாப்பை முதல்வர் வழங்கினார். தொடர்ந்து, சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். விழாவில், எம்.எல்.ஏ., க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் துணை சபாநாயகர் பக்தவச்சலம், பள்ளி முதல்வர் சீத்தா உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில், முதல்வர் ரங்கசாமி, பேசியதாவது:கடந்த ஆண்டு இலவச லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்டலேப்டாப்பை வழங்கி வருகிறோம். காரைக்கால், ஏனாம், மாகி பகுதி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட இருக்கிறது.தற்போது, தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மாணவர்களுக்கு லேப்டாப் அவசியமாக உள்ளது. அரசு பள்ளியில் படித்தால், மருத்துவம் படிப்பதற்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்து, கலைக் கல்லுாரியில் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும், விளையாட்டில் சாதிக்க, விளையாட்டுக்காக தனியாக இயக்குனரகம் உருவாக்கி, இந்தாண்டு 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இலவச அரிசிக்கு பணம் வழங்கப்பட்டு வந்ததது. மக்கள் கோரிக்கையின் பேரில், ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.நிதிநிலை அறிக்கையில், இந்த ஆண்டு, 12 ஆயிரத்து 700 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அரசு பல்வேறு திட்டங்களுக்கு செலவிட அரசு கவனம் செலுத்தும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
3 minutes ago
11 minutes ago
11 minutes ago
16 minutes ago