| ADDED : ஜூன் 23, 2024 05:24 AM
புதுச்சேரி: புதுச்சேரி போலீசுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட மகேந்திரா தார், ரோந்து பைக்குகளை முதல்வர் ரங்கசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.புதுச்சேரி போலீசில் உயர் அதிகாரிகள் பயன்படுத்த ரூ.2.5 கோடி மதிப்பில் 2 மகேந்திரதார் ஜீப், 9 மகேந்திரா பொலிரோ ஜீப், 4 ராயல் என்பில்ட் புல்லட், டி.வி.எஸ். அப்பாச்சி பைக் 10, ஹீரோ சூப்பர் ஸ்பிலண்டர் 115, ஜூபிட்டர் ஸ்கூட்டர் 4 வாங்கப்பட்டது. இதுதவிர போலீஸ் நல்வாழ்வு சங்கம் சார்பில் கோரிமேடு போலீஸ் மைதானம் அருகில் பால் மற்றும் பழச்சாறு நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.கோரிமேடு பல்நோக்கு போலீஸ் வளாகத்தில், ரூ. 42 லட்சம் மதிப்பில் நவீன ஒருங்கிணைந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று கொடி அசைத்து புதிய வாகனங்களை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ், ஐ.ஜி. அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார் யாதவ், சீனியர் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.