உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காமராஜர் நினைவு நுாலகத்திற்கு 2 லட்சம் புத்தகம் வாங்கப்படும் முதல்வர் ரங்கசாமி தகவல் 

காமராஜர் நினைவு நுாலகத்திற்கு 2 லட்சம் புத்தகம் வாங்கப்படும் முதல்வர் ரங்கசாமி தகவல் 

புதுச்சேரி: புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் காமராஜர் மணி மண்டபத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள காமராஜர் நினைவு நுாலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. கலை பண்பாட்டு துறை செயலர் நெடுஞ்செழியன் வரவேற்றார். துறை இயக்குநர் கலியபெருமாள் நோக்கவுரையாற்றினார். சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். ஜான்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி காமராஜர் நினைவு நுாலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் மாணவர்களுக்கு நுாலகத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்ப படிவம் வழங்கி பேசியதாவது;காமராஜர் மணி மண்டபம் ரூ. 39 கோடி மதிப்பில் கட்ட அடிக்கல் நாட்டினேன். கட்டும்போது நான் பதவியில் இல்லை. மணிமண்டபத்தை நானே திறக்கும் பாக்கியம் கிடைத்தது. இங்கு, ஏ.சி. வசதியுடன் 3 அரங்குகள், சென்டாக் அலுவலகம், நாட்டிய நிகழ்ச்சி நடத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிக்கும் மாணவர்களுக்கு ஏற்ற நுால்கள் இங்கு உள்ளது.புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் பல வந்தாலும், நல்ல நுால்களை படித்தால் தான் மாணவர்கள் மனதில் பதியும். தினமும் ஒரு மணி நேரமாவது நல்ல நுால்களை படிக்க வேண்டும். படிக்க படிக்க அறிவாற்றல் வளர்ந்து, மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்..மகாபாரதத்தை படித்தால் வாழ்க்கை என்றால் என்ன என்பது தெரியும். திருக்குறளை படித்து தெளிவடைந்தால், நெறிமுறையான வாழ்க்கை வாழ முடியும். இந்த நுாலகத்தில் தற்போது 50 ஆயிரம் நுால்கள் உள்ளது. இன்னும் 2 லட்சம் நுால்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் நுால்களை தாமாக முன் வந்து கொடுப்பர். அதன் மூலம் நுால்கள் சேர்ந்து கொண்டே சென்று பெரிய நுாலகமாக மாறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி