மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
2 minutes ago
புதுச்சேரி, :புதுச்சேரியில் குழந்தைகள் குறும்பட இரண்டாம் நாள் விழாவில், ஆர்வத்துடன் சிறுவர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி அறிவியல் இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ் இணைந்து 2 நாட்கள் சிறுவர்கள் குறும்பட விழாவை பிரான்சிஸ் கலையரங்கில் நேற்று முன்தினம் துவக்கியது. செய்தி, விளம்பர துறை செயலர் கேசவன் துவக்கி வைத்தார்.அறிவியல் இயக்கத்தின் துணை தலைவர் ேஹாமவதி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ராஜா நோக்கவுரை ஆற்றினார். அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவர் நல்லாம் சதீஷ், இயக்குனர் லாரன்ட் ஜாலிகூஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.நேற்று இரண்டாம் நாள் விழாவில், புதுச்சேரி அரசு கல்வித்துறை செயலர் ஆசிஷ் மதவுராவ் மோர் சிறப்புரை ஆற்றினார். விழாவில், 13 முதல் 18 வரை உள்ள சிறுவர்கள் கலந்து கொண்டனர். அதில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளில் குறும்படங்களை திரையிடப்பட்டது. இரண்டு நாட்களில் மொத்தம் 30 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
2 minutes ago