மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
6 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரண்டு மணி நேரம் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், நகரத்து வீதிகள் தண்ணீரில் தத்தளித்தன. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.புதுச்சேரியில் நேற்று மாலை 6:45 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு, மழை பெய்ய துவங்கியது. சில நிமிடங்களிலேயே மழை நீர் வெளியேற முடியாமல், 'புல்வார்டு' எனப்படும் நகரத்து வீதிகளில் குளம்போல தேங்கியது. இதனால், வீதிகள் வெள்ளக்காடாக மாறியது.காமராஜர் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, புஸ்சி வீதி, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி, பாரதி வீதி, வெள்ளாழர் வீதி, நீடராஜப்பய்யர் வீதி, காந்தி வீதி என பிரதான வீதிகளும் வெள்ளத்துக்கு தப்பவில்லை. இரவு 8:45 மணி வரை 2 மணி நேரம் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வீதிகள் திணறின.சின்ன வாய்க்கால் முழுதும் நிரம்பி சில வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இன்ஜின் மூழ்கும் அளவிற்கு தேங்கிய தண்ணீரில் சிக்கி டூ வீலர்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைந்தன.
நகரப் பகுதியில் பெருக்கெடுக்கும் மழை நீர், சின்ன வாய்க்கால் வழியாக, பெரிய வாய்க்காலுக்கு சென்று கடலுக்கு செல்லும். பெரிய வாய்க்காலில் சில இடங்களில் கட்டுமான பணிகள் நடப்பதால் நேற்று மழை நீர் செல்ல முடியவில்லை.சமீபகாலமாகவே, நகரத்தில் பெருக்கெடுக்கும் மழை நீர் இயல்பாக கடலை நோக்கி செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்கால், உப்பனாறு வாய்க்கால் போன்றவற்றில் தண்ணீரை உள்வாங்குவதில் பிரச்னைகள் உள்ளன.பாதாள சாக்கடையிலும் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து அடைப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், 2 மணி நேர மழைக்கே வீதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கி நின்றது; வடிவதற்கும் பல மணி நேரமானது.
கேரளா மற்றும் வட மாநிலங்கள் பலவற்றிலும் கன மழை கொட்டி தீர்க்கிறது. புதுச்சேரியில் மழைக்காலம் விரைவில் துவங்க உள்ளதால், கடும் புயல், கனமழை நேரங்களில் நிலைமை என்னவாகும் என உள்ளூர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, நகரத்து வீதிகளில் மழை நீர் தேங்குவதற்கான காரணங்களை கண்டறிந்து தடுக்கவும், வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் துார் வாரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுப்பணி, உள்ளாட்சி உள்ளிட்ட அரசின் துறைகள் கைகோர்த்து களம் இறங்க வேண்டும்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago